தூத்துக்குடி

நேற்று நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று தூத்துக்குடி நகரில் கடை அடைப்பு நடைபெறுகிறது.

தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் நடத்தினர்.   இதில் வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.   இதில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

காவல்துறையின் இந்த துப்பாக்கி சூட்டுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.   இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று தூத்துக்குடி நகரில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

[youtube-feed feed=1]