தாகா :

டாக்டர்கள் மருந்து விபரங்களை எழுதி கொடுக்காமல் டைப் அடித்து தான் கொடுக்க வேண்டும் என்று வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

டாக்டர்கள் வழங்கும் சீட்டில் என்ன எழுதியிருக்கிறார்கள், மருந்து, மாத்திரை பெயர் என்ன கண்டுபிடிப்பதற்கே தனி பயிற்சி வேண்டும். அந்த அளவுக்கு கிறுக்கல் எழுத்தாக தான் இருக்கும். சமயத்தில் மருந்து கடைக்காரர்களே குழம்பி போவதும் உண்டு.
இவ்வாறு டாக்டர்கள் கிறுக்குவதை நிறுத்த வேண்டும் என்று வங்கதேச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில். ‘‘இனி டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விபரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும்.

மீறி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தால் மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும்’’ என்று தீர்ப்பு கூறியுள்ளதுர். சுகாதார துறை அதிகாரிகள் இதை கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நம் நாட்டிற்கு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.