சென்னை:
கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
- கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள் மட்டும் செயல்பட தடை,
- உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டும் பயன்படுத்த அனுமதி
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி
- இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி
- வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர 3 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி
- நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.