வர இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய தடகள வீரர்கள் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ள இருக்கும் ரஷ்ய தடகள வீரர்கள், ஊக்கமருந்து உட்கொண்டு பயிற்சிகளில், தகுதிப்போட்டிகளிலும் கலந்துகொண்டதாகவும், அதற்கு ரஷ்ய அரசே உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து கடந்த வாரம், உலக தடகள வீர்ர்களின் நிர்வாக அமைப்பு, வர இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா விளையாட தடை விதித்தது. தற்போது அந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் ஏற்றிருக்கிறது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.