சென்னை:  “மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது”  என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதில் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என கூறி உள்ளது.

பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து மதிமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம்  இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என  நேற்று உத்தர விட்டிருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பதில் அளித்து உள்ளது.  மதிமுக  ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அவர்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வருகிறது நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து, மதிமுகவுக்கும் கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் திருச்சியில் போட்டியிடும் மதிமுக சுயேச்சை சின்னத்தை தேர்வு செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் 2024: மதிமுகவுக்கு ‘பம்பரம்’ கிடைக்குமா?