சென்னை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட்டுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

 

காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து பிரனல யூ டியூபர் சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.

தனக்கு ஜாமின் கோரி ஏற்கனவே ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்ரு இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி இன்று முன்பு விசாரணைக்கு வந்தபோது ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க தயாராக இருப்பதாகவும், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

வேறொரு வழக்கில் இனி சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டேன் என ஏற்கனவே ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது பேச்சுக்கான விளைவு தற்போது தான் உணர்ந்துள்ளதாகவும் இனி இவ்வாறு பேச மாட்டேன் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் நடத்தி வரும் யூ டியூப் சேனலை மூடக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.