டெல்லி
உச்சநீதிமன்றம் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஆன்மீகவாதி ஆசாரம் பாபுவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
ஆன்மீகவாதி ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததையடுத்து அவர், ஜோத்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும் குஜராத்தில் உள்ள காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 2023ல் மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 86 வயதாகும் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வேகமாக மோசமடைந்து வருவதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் ஆசாரம் பாபு ஜாமீன் மனு தாக்கல் செய்து தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தார். நேற்று இந்த மனு ல் நீதிபதி எம்.எம். சுந்திரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் ஆசாராம் பாபு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உயிர் பிழைத்தவரின் சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், இந்த வழக்கில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பது அவசியம் என்று வாதிட்டார்.
ஆனால் குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆசாராம் பாபுவின் மனுவை எதிர்த்து சிறையில் அவருக்கு போதுமான மருத்துவ வசதிகள் உள்ளதாக குறிப்பிட்டார். நீதிபதி எம்.எம். சுந்திரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே ஜாமீன் வழங்குவதாக தெளிவுபடுத்தியது.
ஆசாராம் பாபுவுக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், அவர் தனது சீடர்களை சந்திக்கத் தடை விதித்துள்ளது., ஜாமீன் கால அவகாசம் முடிவடைவதற்கு முன் ஆசாராம் பாபுவின் உடல்நிலையை மறுமதிப்பீடு செய்யலாம் என்வும் உச்சநிதிமன்றம் கூறி உள்ளது.