த்ரோலி

த்ரோலி விவசாயிகள் அமித்ஷாவை சந்திக்க இயலாமல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்

குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷாவை சமீபத்தில் பத்ரோலி பகுதியில் உள்ள விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்க விரும்பியுள்ளனர்.    தங்களின் உறுப்பினர்களின் சில கோரிக்கைகளுக்காகவும் கரும்பு விவசாயிகளுக்கு வந்துள்ள வருமானவரி நோட்டிசுகள் குறித்தும் விவாதிப்பதற்காக அவரிடம் நேரம் வாங்கித் தருமாறு சூரத் பகுதி பா ஜ க தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் அமித்ஷா வந்த அன்று அந்த சங்கத்தின் பிரதிநிதிகளான ஜெயேஷ் பால் மற்றும் ஜெயேஷ் பட்டேல் ஆகிய இருவரும் வெளியே வர முடியாதபடி போலீசாரால் வீட்டுக் காவல் வைக்கப்பட்டனர்.   அவர்கள் போலீசாரிடம் கெஞ்சியும் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை.    இந்த வீட்டுக் காவல் அமித்ஷா பத்ரோலியில் தங்கியிருந்த நாள் முழுவதும் தொடரப்பட்டு  அவர் அந்தப் பகுதியை விட்டுச் சென்றதும்  விலக்கிக் கொள்ளப்பட்டது

குஜராத் மாநிலத்தில் 1928ஆம் வருடம் நடந்த பத்ரோலி சத்யாகிரகம் சுதந்திர போராட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க போராட்டம் ஆகும்.   பிரிட்டிஷார் ஆண்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் சட்டமறுப்பு இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்துக்கான போராட்டத்தை இங்கு சர்தார் வல்லப் பாய் படேல் முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.   இந்தப் போராட்டத்துக்குப் பின் அவர் அகில இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டார்,   சர்தார் படேலை புகழும் பா ஜ க வினருக்கு சர்தார் படேல் சம்பந்தப்பட்ட பத்ரோலி பகுதியை சேர்ந்த விவசாயிகளை சந்திக்கக் கூட முடியாததற்கு சமூக ஆர்வலர் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.