டெஹ்ராடூன்: பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களை இம்மாத (ஏப்ரல்) இறுதியில் திறப்பதற்கு உத்ரகாண்ட் மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கோவில்களின் தலைமை பூசாரிகள், கொரோனா ஊரடங்கினால், கர்நாடகா மற்றும் கேரளாவில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, அவர்களை சாலை வழியாக கோவிலுக்கு அழைத்துவர அனுமதிக்கும்படி, உள்துறை அமைச்சகத்திற்கு, உத்ரகாண்ட் மாநில தலைமை செயலர், உத்பால் குமார் சிங் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், அவர்களை அழைத்துவர முடியாத நிலையில், வேறு பூசாரிகளைக் கொண்டு வழிபாடு நடத்தும்படி அரசு கூறியுள்ளது. கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு இந்தியா முழுவதிலுமிருந்தும் பக்தர்கள் திரளாக வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.