சென்னை: பொதுமக்களின் வசதிக்காக  வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கப்பட  உள்ளது.  தெற்கு ரயில்வேயின் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டப்படும் பன்னடுக்கு கட்டிங்களில், பொழுதுபோக்கு அம்சங்கள், வணிக நிறுவனங்களை நிறுவி வருகிறது மெட்ரோ ரயில் நிர்வாகம். அதுபோலவே பறக்கும் நிலையங்களிலும் ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.

அதன்தொடர்ச்சியாக, புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட உள் அரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  வேளச்சேரி கட்டிடத்தின் பெரும்பகுதி உபயோகமற்ற முறையில் இருப்பதால், அதை சரி செய்து, ஜிம்னாஸ்டிக் சென்டர், பேட்மிண்டர் கிரவுண்டு அமைக்க முடிவு செய்து,  அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

 சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகள்  2008ல் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பொதுமக்கள் தரப்பில் தொடரப்பட்டவ ழக்குகள் காரணமாக, திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து,  2021ல் திமுக ஆட்சிக்கு பின்னரே மீண்டும் இந்த திட்டம் பிரச்சினை தீர்க்கப்பட்டு மீண்டும் பணிகள்  தொடங்கப்பட்டது.  இந்த திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இது  சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வே தரப்பில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.  AD பேட்மிண்டன் அரங்கம் புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள் அரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ள்அது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

தெற்கு ரயில்வேக்கு வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு  பொதுமக்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினர்  மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.