காஷ்மீர்,

ரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அவரது வீடியோ பேச்சு.

எங்களுக்கு வரும் உணவுபொருட்கள் உயர் அதிகாரிகளால் திருடப்படுகின்றன, நாங்கள் சில நேரங்களில் பட்டிணியால் தூங்குகிறோம் என்று குற்றம்சாட்டி உள்ளார் எல்லைபாதுகாப்பு படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர்.

எங்களுக்கு அளிக்கப்படும் உணவு குறித்து, பிரதமர் மோடி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 29 பட்டாலியன் பிரிவை சேர்ந்த டிபி.யாதவ் என்ற கான்ஸ்டபிள் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ பேச்சு, முகநூல் வழியாக சேர் செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில் டிபி.யாதவ் கூறியுள்ளதாவது,

29வது பட்டாலியன் படைபிரிவை சேர்ந்த டி.பி.யாதவ் என்ற 40 வயது மதிக்கத்தக்க காண்ஸ்டபிள் ஒருவர் வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவு குறித்த அவல நிலையை வீடியோ வாயிலாக தெரிய படுத்தி இருக்கிறார்.

3 தனித்தனி வீடியோ பதிவுகளாக எடுக்கப்பட்டு சுமார் 4 நிமிடம் ஓடக்கூடிய வகையில் அந்த வீடியோ உள்ளது.

அதில் யாதவ், தனது சீரூடையுடன், கையில் துப்பாக்கியுடன் உள்ளார். அவர் கூறுவதாவது,

 

29வது பட்டாலியன் படையினர்  சமவெளி பகுதியில் பணியாற்றி வருகிறோம்.  எங்களுக்கு தரப்படும் உணவுகள் சுவையற்று உள்ளன. மேலும் போதுமான அளவிலான உணவுகள் வழங்கப்படுவது இல்லை என்று கூறுகிறார்.

எங்களுக்கு காலை உணவாக புரோட்டா உடன் டீ மட்டுமே வழங்கப்படுவதாகவும், அத்துடன் ஊறுகாயோ, எந்தவித காய்கறிகளோ தரப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

மதிய உணவாக  ரொட்டியுடன் பருப்பு மட்டுமே வழங்கப்படுவதாகவும். இந்த உணவு சாப்பிட்டுவிட்டு, நாங்கள் 11 மணி நேரம் நின்றுகொண்டே பணி புரிவதாகவும் கூறுகிறார்.

இதை சாப்பிட்டுக்கொண்டு நாங்கள் எப்படி பணி புரிய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் சில நேரங்களில் வெறும் வயிறுடனே படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்றும் கூறினார்.

மேலும் எங்களுக்கு வரும் உணவு பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், அதை உயர்அதிகாரிகள் திருடிவிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி பேசினால் உயர்அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர்.

‘இதுகுறித்து பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த வீடியோவை யார் முகநூல் வலைதளத்தில் பதிவேற்றியது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை விரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், அவரது குற்றச்சாட்டு குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார்.

எல்லை பாதுகாப்பு படைவிரர்கள் முகாமில்  உள்ள அவல நிலை குறித்த வீடியோ பார்த்தேன். அதுகுறித்த உடனடியாக அறிக்கை தரும்படியும், உரை உரிய நடவடிக்கை எடுக்கவும் உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக டுவிட் செய்துள்ளார்.

[embedyt] http://www.youtube.com/watch?v=HjTv8d7WHzs[/embedyt]