சென்னை:  தவெக கட்சி பிரமுகரே ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு  எதிர்ப்பு  தெரிவித்தததுடன், அதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என  அவர் முன்னிலையில் பேசிய நிலையில், ரஜினியிடம் பகிரங்கமான மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜுனா/

.இந்த நிலையில், கொளத்தூரில் இன்று நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் பேசும் போது, “ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் விளக்கம் கொடுக்க வேண்டும். நான் இன்று நல்ல நிலைமையில் நேர்மையாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரஜினிகாந்த்,” என்று  ஆதவ்அர்ஜுனா முன்னிலையில் பேசினார். அவரது பேச்சு  சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா‘ பேசும்போது,  தலைவர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது, அன்பு மட்டும்தான் இருக்கிறது. ரஜினியை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது பயந்துவிட்டார் என்பதையோ நான் சொல்லவில்லை. தி.மு.க.வின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன். நான் சொல்ல வந்த நோக்கம் வேறு. நான் பேசியது உங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன். வேறு யாருக்கும் பதில் கொடுக்க இங்க வரவில்லை. ரஜினிகாந்த் அறிக்கை படித்தேன். அவரது உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன் என தெரிவித்தார்.”,

முன்னதாக, த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. மிரட்டலால் தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்..பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (மார்ச் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “தனக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டு காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும், என்று தெரிவித்து இருந்தார்.

[youtube-feed feed=1]