டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில், தற்போது ஆட்சி செய்து வரும் ஆளும் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
18வது மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சியில் உள்ளது. அதுபோல ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான கட்சி ஆட்சியில் உள்ளது.
ஒடிசாவில் கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்க மொத்த ள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை. ஆனால் தற்போதைய நிலவரப்படி, அங்கு பாஜக முன்னிலையில் உள்ளது.
ஒடிசா ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 10மணி நிலவரப்படி, பாஜக 13 இடங்களில் முன்னணியில் உள்ளது. ஆளும் கட்சியான பிஜேடி 6 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால், ஒடிசாவில் அடுத்து யார் ஆட்சி என்பதில் பா.ஜ.க. மற்றும் பி.ஜே.டி. இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல 75 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை. தற்போதைய நிலவரப்படி (காலை 10 மணி) சந்திரபாபு நாயுடுவின் தெருங்குதேசம் 93 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதனால், அங்கு தெலுங்கு தேசம் ஆட்சியை பிடிக்கும் என நம்பப்படுகிறது.