முல்லைப் பெரியாறு அணை அருகே பேபி அணை : திமுக முயற்சியும் அதிமுக முயற்சியின்மையும்

*** 2011 முதல் 2021 வரை நடைபெற்ற அ. தி. மு. க. ஆட்சியில் ஈ. பி. எஸ். – ஓ. பி. எஸ்.. இருவருமே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்கள்!

ஆனால், முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளப் பகுதியைச் சேர்ந்த மூன்று மரங்களை வெட்டினால் தான் நாம் அங்கே பேபி டேம் கட்ட முடியும் என்னும் இக்கட்டு!

ஆனால், ” நாங்க 14 வருசமா அங்கே சென்று பார்வையிட்டு வந்தோம்.. ” என்று அவர்கள் பெருமை பேசினார்கள்!

ஆனால், தமிழக முதல்வர், கேரள முதல்வரிடம் மரங்கள் தொடர்பாகக் கோரிக்கை வைக்கவும், உடனடியாக அவற்றை வெட்டிக் கொள்ள அவர் அனுமதி அளித்து விட்டார்!

இனி நாம் அங்கே பேபி டேம் கட்டிக் கொள்ளலாம்! தடை இல்லை!!

*** தற்போது தமிழகமெங்கும் வடகிழக்குப் பருவ மழை பலமாகப் பெய்து வருகிறது!

அதிலும் சென்னை நகரில், 2015 இல் ஜெ. ஆட்சியில் பெய்ததை விட அதிக மழை பெய்து வருகிறது!

ஆனால், அன்று செம்பரம்பாக்கம் ஏரியை அவர்கள் ஒரே இரவில் முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதால்.. ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர்.. ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து நடுத் தெருவில் நின்றனர்!

ஆனால், இன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரடியாகக் களத்தில் இறங்கி மழை பெய்யம் பகுதிகளைப் பார்வையிட்டு வருகிறார்!

பாதிப்புகளைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்!

** இந்த இரண்டு நிகழ்வுகளும், நடப்பது மக்கள் முதல்வரின் ஆட்சி என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்கிறார்கள் மக்கள்!

** ஓவியர் இரா. பாரி.