லக்னோ,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
அவர்களுக்கு ஜாமின் வழங்கி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபர் மசூதி வழக்கில் இருந்து அத்வானி உள்பட பாரதியஜனதா கட்சி நிர்வாகிகளை அலகாபாத் நீதி மன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அத்வானி உள்பட பாரதியஜனதாவினர் மீது, மீண்டும் வழக்கை நடத்த லக்னோ நீதி மன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது.
அதைத்தொடரந்து பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய விசாரணைக்கு ஆஜராகுமாறு , பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து அத்வானி உள்பட 12 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் முன்ஜாமின் மனுவையும் தாக்கல் செய்தனர்.
இதையேற்று நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அத்வானி உள்ளிட்டோருக்கு ரூ.50,000 பிணை தொகையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது
அத்வானி உள்பட பா.ஜ.மூத்த தலைவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் லக்னோவில் உள்ள விவிஐபி இல்லத்தில் அத்வானியுடன், முதல்வர் ஆதித்யநாத் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.