டில்லி,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அ்தவானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் வழக்கில் இருந்து விடுவித்து ரேபரேலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதை எதிர்த்து சிபிஐ உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி உத்தரப்பிரதேசத்தில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
அதன் காரணமாக, நாடு முழுவதும் மதக்கலவரங்களும் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து இதற்கு காரணமம் என கூறி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில், அத்வானி, ஜோஷி, உமாபாரதி போன்ற தலைவர்கள் ரேபரேலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்த நீதி மன்ற தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது.
இதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதி மன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட 13 பேரை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.