டில்லி:
பிரபல யோகா குருவான பாபா ராம்தேவின் கூட்டாளியும், பதஞ்சலி நிறுவன தலைவருமான பாலகிருஷ்ணா நெஞ்சுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு ஹரித்துவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணா, அங்குள்ள மருத்துவர்களின் சிபாரிசின் பேரில் நேற்று மாலை 4.15 மணி அளவில் ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதை எய்ம்ஸ் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரம்ம பிரகாஷ் உறுதிப்படுத்தி உள்ளார்.
தற்போது 47 வயதாகும் பாலகிருஷ்ணா பதஞ்சலி நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு நேற்று மாலை திடீரென உடல்சோர்வு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதை யடுத்து உடடினயாக ஹரித்வாரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்று யோகா நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மயங்கிய நிலையிலேயே பால்கிருஷ்ணா எய்ம்சில் உள்ள ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறிய மருத்துவமனை வட்டாரம், அவருக்கு சில சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், முக்கிய சோதனையில் அவரது உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளனர்.
மேலும், பாலகிருஷ்ணாவுக்கு ஒரு நரம்பியல் மருத்துவர் மற்றும் இருதய மருத்துவர் அவரை பரிசோதித்து வருகின்றனர், அவரது ரத்த ஓட்டத்தில் உள்ள என்சைம்கள் உள்ளிட்ட சில அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும், அவர் ஒரு சிறப்புக் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரம்மபிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கூறிய பாலகிருஷ்ண உதவியாளர் ஒருவர், நேற்று நடைபெற்ற ஜன்மாஷ்டமி பண்டிகையையொட்டி பதஞ்சலியில் பார்வையாளர் ஒருவர் வழங்கிய பேடாவை சாப்பிட்ட பிறகே பால்கிருஷ்ணா நோய்வாய்ப்பட்டதாகவும், அதன்பிறகுதான் அவருக்கு குமட்டல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது, அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருக்க வாய்ப்பு உள்தாகவும் தெரிவித்து உள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.