
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.
கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் விஜயேந்தி பிரசாத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள விஜயேந்திர பிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதியவர் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆவார்.
தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத்.
[youtube-feed feed=1]