பெங்களூரு: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அஸிம் பிரேம்ஜி, விப்ரோ நிறுவனத்தில் தனக்குள்ள 34% பங்குகளிலிருந்து கிடைக்கும் பொருளாதார பலன்களை, தனது மனிதநேய உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த 34% பங்குகளின் ரூபாய் மதிப்பு ரூ.52,750 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக இணைந்த இந்தப் பெருந்தொகையுடன் சேர்த்தால், அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் மற்றும் விப்ரோ நிறுவம் இணைந்து மனிதநேய உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் தொகையின் அளவு, விப்ரோ நிறுவனத்தினுடைய மொத்த பொருளாதார பலத்தில் 67% என்ற பெரிய அளவை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் பொருளாதார பலாபலன்கள், மேற்சொன்ன செயல்களுக்காக பயன்படுத்தப்படும். தனது மனிதநேயம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே புகழ்பெற்றிருப்பவர் அஸிம் பிரேம்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, அவர் தனது ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பையும் இதில் ஈடுபடுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
– மதுரை மாயாண்டி