புதுடெல்லி:

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘ஆயுஸ்மான் பாரத்’ மருத்துவ திட்டத்தின்படி, 10 சதவீத ஏழைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதே இல்லை. மருத்துவம் செய்துவிட்டு அவர்களிடம் பணம் வசூலிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘ஆயுஸ்மான் பாரத்’ என்ற திட்டத்தின் படி, தனியார் மருத்துவமனைகளிலும் 10 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த திட்டத்தை பாஜக கொண்டாடியது. ஆனால் எந்த தனியார் மருத்துவனையிலும் இதை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த திட்டம் தொடங்கியபின். முதல் 100 நாட்களில் 6 லட்சத்து, 85 ஆயிரம் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளதாக மோடி அரசு பெருமை பட்டுக் கொண்டது.

ஆனால், இந்த திட்டத்தை தனியார் மருத்துவமனைகள் மதிக்கவே இல்லை. இலவசமாக யாரும் சிகிச்சை தரவில்லை. பணம் வாங்குகின்றனர் என்று அரசியல் கட்சிகள், மருத்துவர்கள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்த திட்டம் உலகிலேயே அருமையான திட்டம். இதனை செயல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லாததும், கண்காணிப்பு இல்லாததுமே  தனியார் மருத்துவமனைகள் கண்டுகொள்ளாததற்கு காரணம்.

வரும் 2019-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்தே இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் என்கிறார் மருத்துவர் அகர்வால்.

“நாங்கள் ஆயுஸ்மான் பாரத் அடையாள அட்டை இல்லாத பலருக்கும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்திருக்கின்றோம்.
இஎஸ்ஐ திட்டத்தை விரிவு படுத்தியிருந்தாலே, 50 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை கிடைக்கும்.

மருத்துவம் தற்போது மாநில அதிகாரத்துக்குள் வருகிறது. எனவே மருத்துவத்தை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவசர சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் 13 ஆயிரம் மருத்துவமனைகளின் பெயர்களை பிரதமர் மோடி வெளியிட்டார். இவற்றில் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளே என்கிறார் மருத்துவர் வினோத் பாவ்ல்.

பாஜகவினர் சொல்வதைப் போல், இந்த திட்டம் நன்றாக செயல்பட்டிருந்தால், 3 மாநிலங்கள் ஏன் தோற்றார்கள் என்று டெல்லி மருத்துவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.