அயோத்தி
அயோத்தியில் அமைச்ந்துள்ள ராமர் கோவில் பாதுகாப்ப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.
காவல் துறையின் சிறப்பு பாதுகாப்பு படையினர் அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டேஷ்வர் கோவிலுக்கு எதிரே உள்ள வி.ஐ.பி. கேட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் சத்ருகன் விஷ்வகர்மா (வயது 25) இன்று அதிகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
காவலரி சர்வீஸ் துப்பாக்கியில் இருந்த தோட்டா பாய்ந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது ராமர் கோவில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர் இறந்த இடத்தில் இருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் ராமர் கோவிலின் கருவறை உள்ளது.
காவலர் சத்ருகன் விஷ்வகர்மா தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தாரா? அல்லது துப்பாக்கியில் தவறுதலாக கை பட்டு தோட்டா பாய்ந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஐ.ஜி. பிரவீன் குமார் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி ராமஜென்ம பூமியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாகாண ஆயுதப்படை காவலர் ஒருவர், அவரது சர்வீஸ் துப்பாக்கியின் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் இறந்தது குரிப்பிடத்தக்கதாகும்.