யோத்தி

யோத்தி ரெயில் நிலையம் விரைவில் ராமர் கோவில் வடிவில் மாற்றி அமைக்கப்படும் என ரெயில்வேத்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ரெயில்வேத் துறையில் ரெயில் நிலையங்களை மாற்றி அமைக்கும் பணி உட்பட பல திட்டங்களுக்கு இன்று ரெயில்வேத் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா அடிக்கல் நாட்டினார்.   மொத்தம் ரூ. 200 கோடி மதிப்பிலான இந்த திட்டங்களில் ரெயில் நிலையங்கள் மாற்றி அமைக்க ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இந்த நிகழ்வில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் வினய் கட்டியாரும் கலந்துக் கொண்டார்.

அப்போது உரையாற்றிய மனோஜ் சின்ஹா, “மாற்றி அமைக்கப்படும் ஒவ்வொரு ரெயில் நிலையமும் அந்தந்த மாநில கலைகளின் அடிப்படையில் அமையும்.   அயோத்தி ரெயில் நிலையம் ராமர் கோவில் வடிவில் மாற்றி அமைக்கப்படும்.    அத்துடன் அயோத்தி ரெயில் நிலையத்துக்கு ராம பக்தர்கள் வருவதற்கு வசதியாக நாட்டின் அனைத்து ரெயில் நிலையங்களுடனும் இணைக்கப்படும்.   தற்போது வேலைகள் நடைபெற்று வரும் ஃபைசாபாத் – பாரபன்கி இருவழிப் பாதை ரூ. 1116 கோடி செலவில் வரும் 2022க்குள் முடிக்கப்படும்”  எனத் தெரிவித்தார்.