மும்பை,

தேர்தல் நேரத்தில் மட்டும் அயோத்தியா? பா.ஜ.க. மீது, சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

உ.பி.யில்  தேர்தல் நெருங்கும்போது மட்டுமே அயோத்தி விவகாரத்தை பா.ஜ. கையிலெடுக்கிறது என்றம்,  இதுவரை அயோத்தியில்  ராமர் கோயில் கட்டாதது ஏன்? எனவும்  பா.ஜ.,வுக்கு சிவ சேனா தலைவர்  உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

பாரதியஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, மத்திய பா.ஜ.க அரசின் பெரும்பாலான திட்டங்களை எதிர்த்து வருகிறது. சிவசேனாவின் போக்கு பா.ஜ.வை  அதிருப்தியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‛சிவசேனா மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்’ என கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ்தாக்கரே,

தேர்தல் நெருங்கும்போது மட்டுமே அயோத்தி விவகாரத்தை பா.ஜ., எழுப்புகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று தெரிவிப்பதோடு சரி, அதற்கான எந்த நடவடிக்கையையும் பா.ஜ., எடுப்பதில்லை. அங்கு இதுவரை ராமர் கோயில் கட்டாதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பட்னாவிஸ் விமர்சனத்துக்கு பதில் கூற மறுத்த அவர், பட்னாவிஸிக்கு மும்பை மக்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.