டில்லி:
உ.பி. மாநிலத்தில் ராமர் கோவில் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பான உரிமை தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 14ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்.
இடிக்கப்பட்ட, பாபர் மசூதி இருந்த 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்திற்கு யார் சொந்தம் என்று உரிமை கோரிய வழக்கில், வழக்கு தொடர்ந்த, முஸ்லீம் வக்பு வாரியம், ராமர்கோவில் நிர்வாகம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியோர் சமமாக பிரித்து உபயோகப்படுத்த அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனேவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, இது குறித்து பிப்ரவரியில் விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அஷோக் பூஷண், நஜீப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது இருப்பதால், இவ்வழக்கை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.