லக்னோ: திபாவளி தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை  படைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 22 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு  கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிலையில், இந்தஆண்டு மேலும் அதிக விளக்குகள், அதாவது   அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

தீபாவளி திருநாளையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு தீப உற்சவ திருவிழா நடைபெறும். அதன்படி அயோத்தியில் தற்போது தீப உற்சவ திருவிழா  கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக அக்டோபர் 31ந்தேதி தீபாவளி அன்று அங்குள்ள  சரயு நதிக்கரையில் 28 லட்சம்  விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த கின்னஸ் சாதனை படைக்க,  30 ஆயிரம் தன்னார்வலர்கள் கடுமையாக உழைத்து, ஏற்பாடுகளை முழுமையாக செய்து வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளனர்.

மேலும், இதையொட்டி, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய ஆறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரையில் ஏற்றப்பட்ட  28 லட்சம் விளக்குகளால், அந்த பகுதி முழுவதும்  பிரகாசமாக ஜொலித்தது. தொடர்ந்த   சரயு நதிக்கரையில் ஒரே நேரத்தில்  1,100 பூசாரிகள் தீப ஆரத்தியும் எடுத்தனர்.

இதற்காக ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரையின் 55 படித்துறைகளில் நேற்று 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்பட்டன. இந்த விளக்கு சாதானை . கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை சேர்ந்த 30 பேர் குழுவினரும் இங்கு வந்திருந்தனர். அவர்கள் டிரோன்கள் மூலம் விளக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சரயு நதிக்கரையில் 1,100 புரோகிதர்கள் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சிக்கும் நடைபெற்றது.

அயோத்தியில் 28 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. ஒரே இடத்தில் அதிகளவிலான மக்கள் தீபஆரத்தி காட்டியதாக மற்றொரு சாதனை நிகழ்த்தப்பட்டது..

இந்த  நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீப உற்சவத்தை முன்னிட்டு சோபா யாத்ரா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 6 நாடுகள், மற்றும் 16 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இங்கு கலை நிகழ்ச்சி நடத்தினர்.  அயோத்தி தீப உற்சவத்தை முன்னிட்டு, 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீப உற்சவத்தை பார்வையிட பல்லாயிர கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். இவர்கள் தீப உற்சவத்தின் முழு காட்சியையும் பார்வையிட ஆங்காங்கே எல்இடி திரைகளும் பொருத்தப்பட்டிருந்தன.

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ஒளி விளக்குகளால் அயோத்யா நகரமே ஜொலிக்கிறது.

500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்யாவில் தீபாவளி நேரத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிடும் ஶ்ரீ ராம் லல்லா