டெல்லி:
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்னும் ஓரிரு நாளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்க உள்ளதால், நாடு முழுவதும் பரபரப்பு நிலவ வருகிறது.
இந்த நிலையில், உ.பி. மாநில தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோருடன் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்து உள்ளது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி பாஜக அமைச்சர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரப் பிரதேச தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட உள்ளது.