டெல்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதையொட்டி உ.பி.யில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  மேலும் 4ஆயிரம் துணை ராணுவத்தின் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன்  நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை,  தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமை யிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்னும் 10 நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில், அதற்குள் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக நாடு முழுவதும் பரபரப்பும், மக்களிடையே பதற்றமும் நிலவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  சமூக வலைதளங்களுக்கும் கண்காணிக்கப்பட்டு  வருகின்றன.

இந்த நிலையில்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சட்டம் – ஒழுங்கு  தொடர்பாக உத்தரப் பிரதேச தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கிடையில் உ.பி. மாநிலத்தில், தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தால் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 30 படைகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன/

அயோத்தியில் உள்ள தர்மசாலாக்களில் தங்கியுள்ளோர் நவம்பர் 12ம் தேதிக்குள் வெளியேறி விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து தர்மசாலாக்களையும் காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்ளூரைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் மாநிலப் போலீஸார் உள்பட 300 கம்பெனி பாதுகாப்புப் படையினர் அயோத்தியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலத்திற்கு அருகே உள்ள ராம் கோட் பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும்,  அயோத்தி முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, 4,000 துணை ராணுவ வீரர்களை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் துணை ராணுவப் படைகளின் கம்பெனிகள் மற்றும் உத்தரபிரதேச காவல்துறையின் ஆயுதக் கான்ஸ்டாபுலரி (பிஏசி) உள்ளிட்ட பல படை பிரிவுகள் அயோத்தி அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிது.

இதற்கிடையே அயோத்தி தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் மிகுந்த விழிப்புணர்வுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.