
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், மிகச்சிறப்பாக ஆடிவந்த அக்ஸார், எதிர்பாராதவிதமாக ரன்அவுட் ஆகியுள்ளார்.
43 ரன்கள் எடுத்திருந்த அக்ஸார், கட்டாயம் அரைசதம் எடுத்து, இங்கிலாந்தை மேலும் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக ரன்அவுட் ஆகியுள்ளார். பேர்ஸ்டோ இவரை ரன்அவுட் செய்துள்ளார்.
இப்படியான ஒரு முக்கிய கட்டத்தில், சிறப்பாக ஆடிவந்த இந்திய வீரர் ரன்அவுட் ஆகியுள்ளது கொடுமையானதாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம், இந்திய அணி 200 ரன்கள் வரை முன்னிலைப் பெறுமா? என்பதில் பெரிய கேள்விக்குறி விழுந்துள்ளது. அக்ஸார், டெஸ்ட்டில் தனது முதல் அரைசத வாய்ப்பை அநியாயமாக நழுவவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel