புதுடெல்லி:
அவசர தேவைகள் இருந்தால் தவிர, இலங்கை செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
தீவிரவாதிகளுக்கும் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையேயான சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைக்கு அவசர தேவை இருந்தால் மட்டும் செல்ல வேண்டும். இல்லையெனில் அங்கு செல்வதை தவிர்த்துவிட வேண்டும்.
இலங்கைக்கு சென்றுள்ள இந்தியர்களுக்கு ஏதும் அவசர தேவையெனில், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல், கண்டியில் உள்ள உதவி தூதரகம், ஹம்பண்டோடா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகங்களையும் உதவிக்கு அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.