டாக்கா: வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராயை படுகொலை செய்த வழக்கில் 5 பேருக்கு அந் நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.

வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கட்டுரைகளை வலை தளத்தில் எழுதி வந்தவர் அவிஜித் ராய். வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். டாக்கா பல்கலைக்கழகத்தில் 2015ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார்.

கண்காட்சியை பார்வையிட்டு விட்டு அவா் வெளியே வந்தபோது மத அடிப்படைவாத அமைப்பினா் சரமாரியாக வெட்டிக் கொன்றனா். தாக்குதலில் அவிஜித் மனைவி ரபிதா அகமது காயமடைந்தார்.

படுகொலை தொடா்பாக விசாரணை நடத்தி வந்த அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்பு சிறப்புத் தீா்ப்பாயம், முன்னாள் ராணுவ மேஜா் சையது ஜியாவுல் ஹக் உள்ளிட்ட 5 மதவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.