கொல்கத்தா: வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயல்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதா நகலை கிழித்தும் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந் நிலையில், வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயல்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய 8 எம்.பி.க்களை சஸ்பென்ட் செய்துள்ளது துரதிஷ்டவசமானது. அரசின் அதிகார மனநிலையை தான் இது காட்டுகிறது.
ஜனநாயகத்தின் கொள்கைகளை அரசு பின்பற்றவில்லை. நாங்கள் அடிபணிய மாட்டோம், பாஜக அரசை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.