டேராடூன்:
உத்தரகாண்ட் மாநில நீதித்துறையில் சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஜூனியர் பிரிவில் டேராடூனை சேர்ந்த பூணம் தோடி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
அவரது தந்தை ஆட்டோ டிரைவர். பூணம் தோடியின் இந்த வெற்றிக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர் 2010ம் ஆண்டு டேராடூன் தவ் கல்லூரியில் எம்.காம் பயின்றார். நீதித்துறை தேர்தவில் இவர் கலந்துகொண்டது இது 3வது முறையாகும்.
இது குறித்து பூணம் தோடி கூறுகையில், ‘‘ குடும்பத்தின் கூடுதல் வருமானத்திற்காக என்னை பணியில் சேர சொல்லி எனது பெற்றோர் வற்புறுத்தவில்லை. மாறாக அவர்கள் என்னை மேலும் படிக்க ஊக்கப்படுத்தினர். அதனால் தான் எம்.காம் மற்றும் சட்டப் படிப்புகள் வரை என்னால் படிக்க முடிந்தது’’ என்றார்.