captain
சேலத்தில் இன்று கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களை தாக்கும் வகையில் கையை ஓங்கினார். மேலும், தனது பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலரையும் தாக்கினார்.
மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவரும், தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் இன்று சேலம் வந்தார்.
கூட்டம் நடைபெறும் இடத்துக்கு காரில் வந்து இறங்கிய விஜயகாந்தை சூழ்ந்த செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். பேட்டிக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களை நோக்கி கையை ஓங்கினார் விஜயகாந்த். பின்னர் செய்தியாளர்களை நேக்கி கையை கூப்பிய விஜயகாந்த், திருமண மண்டபம் நோக்கிச் சென்றார்.
அப்போது படிகளில் ஏறும்போது, விழாமல் இருக்க விஜயகாந்தை தாங்கிப்பிடித்த பாதுகாவலரை நாக்கை துருத்தி அவரது முகத்தில் இருமுறை தாக்கினார் விஜயகாந்த்.