
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி 150 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரம் தேமுதிக தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்று தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. நாங்கள் 150க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம். வரும் ஆட்சி எங்களுடைய ஆட்சியாக இருக்கும். இளைஞர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். கேப்டன் முதலமைச்சராவார் என்றார்.
Patrikai.com official YouTube Channel