mk
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மழை வெள்ள நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தை விடுபட்ட அனைவருக்கும் வழங்கும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகரில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.கே. மோகனை ஆதரித்து, திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சி காலத்தில், மழை, வெள்ள நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. அதிலும் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் ஆளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து அதிலும் ஊழல் நடந்துள்ளது.
இங்கே உங்கள் முன் சொல்கிறேன், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், யார் யாருக்கெல்லாம் நிவாரண உதவி வழங்கப்படாமல் விடுபட்டுள்ளதோ அவர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் ரூபாயை தலைவர் கருணாநிதி வழங்குவார் என்று ஸ்டாலின் கூறினார்.