acc
தினசரி ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும்   நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம்  அரசியல் தலைவர்கள் பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
குறிப்பாக, பா.ம.க.  கட்சியின் முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில், அவருக்கு மூன்றாவது  இடம் கிடைக்கலாம் என்று அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இது குறித்து வைகோ வியப்பு தெரிவித்துள்ளார்.  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில், அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்த வைகோ   பேசுகையில், “அன்புமணிக்கு  3ம் இடம் கிடைக்கும் என்பதெல்லாம் நம்பும்படியாகவே இல்லை. எங்கள் எதிரியாக இருந்தாலும், இது தவறானது என்றே சொல்வேன்: என்று பேசினார்.

[youtube-feed feed=1]