
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 16–5–2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை 1–5–2016 அன்று (நேற்று) ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் தலைவர் காளன் தலைமையில், மூத்த துணைத் தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன், பொதுச் செயலாளர் ஆர்.ஆதிகேசவன், மூத்த துணைத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் என்.தேவராஜன் மற்றும் இளைஞர் அணி பொதுச் செயலாளர் பி.கோபிநாத் ஆகியோர் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய தொழிற்சங்கத்தின் ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ராஜஸ்தானி சங்கத்தின் (தமிழ்நாடு) துணைத் தலைவர் சிவகுமார் கோயங்கா தலைமையில் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தங்கள் அமைப்பின் ஆதரவை தெரிவித்தனர்’’என்று கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel