
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 27 ஆம் நாள் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார். எனவே, அன்று உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத்தில் மாறுதல் செய்யப்படுகிறது.
அதற்குப் பதிலாக ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று உளுந்தூர்பேட்டை தொகுதி கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வைகோ சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். எனவே, ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி, பல்லடம், தாராபுரம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் வைகோ மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப் படுகிறது. இது குறித்து விவரம் பின்னர் அறிவிக்கப்படவிருக்கிறது.
Patrikai.com official YouTube Channel