m
 
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் இன்று அரக்கோணம் வந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை பா.ஜனதா சிறப்பாக கொண்டாடியது. காங்கிரஸ் கட்சி அம்பேத்காரை மறந்து விட்டது. மத்திய அரசு ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் சரியான ஆட்சி தர முடியாது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஊழல் புரிந்து ஆட்சி நடத்தியுள்ளனர்.
விவசாயிகள் இளைஞர்களுக்கு முன்னேற்றம் இல்லை. புதிய வாக்காளர்களை நம்பி பா.ஜனதா தேர்தலில் களமிறங்கி உள்ளது. தி.மு.க.– ம.தி.மு.க. இலங்கை தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள். பிரதமர் மோடிதான் முதன் முதலில் யாழ்ப்பாணத்துக்கு சென்று தமிழர் நலனுக்காக பேசினார். மணல், கிரானைட், மது உரிமையாளர்கள் தமிழக அரசை நடத்துபவர்களாக உள்ளனர்.
அ.தி.மு.க., தி.மு.க. வேட் பாளர்களை அடிக்கடி மாற்றுவது அவர்களது வியாபார நிலையை காட்டுகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மது ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.