
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தன் இரண்டாம் கட்ட பிரசாரத்தை, இன்று மணப்பாறை தொகுதியில் துவங்குகிறார். பிரேமலதா கடந்த, 13ம் தேதி முதல் கட்ட பிரசாரத்தை துவங்கி, நேற்று முடித்தார். இரண்டாம் கட்ட பிரசாரத்தை, இன்று துவங்கும் அவர் மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டை தொகுதிகளில், ஆறு இடங்களில் பேசுகிறார்.
நாளை, மண்ணச்சநல்லுார், திருச்சி மேற்கு, திருவெறும்பூர் தொகுதிகளில், ஏழு இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். 23ம் தேதி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி தொகுதிகளில், எட்டு இடங்களில் பேசுகிறார். வரும், 24ம் தேதி கும்பகோணம், மயிலாடுதுறை தொகுதிகளில், ஆறு இடங்களிலும், 25ம் தேதி குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில், எட்டு இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.
Patrikai.com official YouTube Channel