தர்மசாலா:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு தலாய்லாமா ஆசி வழங்கினார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது 4வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் முகாமிட்டுள்ளனர். நாளை போட்டி தொடங்க இருக்கிறது. இதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய்லாமாவை மெக் லியோடஜங்கில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சந்தித்தனர். வழக்கம் போல உற்சாக மனநிலையில் இருந்த தலாய்லாமா வீரர்கள், மற்றும் அவர்களுடன் வந்திரு ந்த அதிகாரிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் நீண்ட நேரம் பேசினார்.

அதோடு விளையாட்டுத்தனமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மூக்கு மீது இவர் மூக்கை இணைத்து மகிழ்ச்சியை ஏற்ப டுத்தினார். பின்னர் தலாய்லாமா வீரர்களுடன் கலந்துரையாடினார்.

ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்,‘‘அதிக அழுத்தம் கொண்ட ஒரு டெஸ்ட் போட்டி இருக்கும் போது எப்படி நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்வது என்று கேட்டேன். அதற்கு அவர் எனது மூக்கோடு அவரது மூக்கை சேர்த்து ஆசி வழங்கினார். இந்த ஆசி எனக்கு அடுத்த 5 நாள் தூக்கத்திற்கு நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.