ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மாக்ஸ்வெல் தமிழ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த வினி ராமனை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணம் தள்ளிப் போனது.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த வினி ராமன் அங்குள்ள கல்லூரியில் மருத்துவ அறிவியல் துறையில் பட்டம் பெற்று பார்மசிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.

 

2013 ம் ஆண்டு மெல்பர்ன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் முதலாக சந்தித்த இவர்கள் இருவரும் 2017 ம் ஆண்டுக்குப் பின் பாரிஸ், லண்டன், நியூஸிலாந்து என்று பல்வேறு ஊர்களுக்கு ஜோடியாக சென்று வந்துள்ளனர்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வினி ராமனை வரும் மார்ச் மாதம் 27 ம் தேதி ஆஸ்திரேலியாவின் கிளென் மாக்ஸ்வெல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான தகவல் தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடமும் சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.