சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ராட் மார்ஷ் காலமானார். அவருக்கு வயது 74. உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அடிலெய்டு மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர்  ஸ்காட் மோரிசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில்  வரலாற்றில்  ராட் மார்ஷ் ஒரு “மகத்தான நபராக” நினைவுகூரப்பட்டார். 74 வயதான மார்ஷ்,  சுமார் 50 ஆண்டுகாலம் கிரிக்கெட் உலகில் பணியாற்றி வந்தவர். இதுவரை  96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என அனைத்திலும் சிறந்து விளங்கியர்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்த மார்ஷ் 1970 இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்  சர்வதேச  ஆட்டக்காரராக அறிமுகமானார், அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் ஆடி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பங்களித்தவர்,  ‘அயர்ன் க்ளோவ்ஸ்’ என்ற புனைப்பெயர் கொண்ட அவர், 92 ODIகளிலும் விளையாடினார், மேலும் 1982 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆவார்.  1984 ம் ஆண்டு கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். பின்னர் நீண்டகாலமாக தேசிய தேர்வாளராக இருந்து வந்தார்.

கிரிக்கெட் அகாடமி, ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஜஸ்டின் லாங்கர் உட்பட டஜன் கணக்கான வீரர்களை தேர்வு செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை மேலும் மேலும் உயர்த்துக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.

ராட் மார்ஷ் காலமானதை அறிந்த உலக கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், சிகர்கள் என அனைத்து தரப்பினரும் அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மார்ஷ்  தனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றும், அவர் “ஒரு கடுமையான போட்டியாளர் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர் என்றும் குறிப்பிட்டார். “அவர் ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நினைவுகூறப்படுவார்,” என்று அவர் மேலும் கூறினார்.

ராட் மார்ஷ் காலமானதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அவரது முன்னாள் கேப்டனும் நீண்டகால நண்பருமான இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

“ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. அவர் எங்கள் சிறந்த ஆட்டத்தின் ஜாம்பவான் மற்றும் பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்தார் என மற்றொரு வீரரான ஷேன் வார்னே  தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் அவரை “ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஒரு மகத்தான நபர்” என்று பாராட்டினார். சுமார் 50 வருட அபாரமான சேவை”. “நான் ராட்டைப் பற்றி நினைக்கும் போது, ​​தாராளமான மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்கிறேன், அவர் எப்போதும் வாழ்க்கையை நேசிக்கும், நேர்மறையான மற்றும் நிதானமான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார், மேலும் அவரது மறைவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சமூகத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது” என்றுகூறினார்.

ராட் மார்ஷ் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.