ஆஸ்திரேலிய ரசிகர்களின் அநாகரீக செயல் – மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

Must read

சிட்னி: ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர், இந்திய வீரர்களிடம் நிறவெறியுடன் நடந்துகொண்டதற்காக, மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

சிட்னி மைதானத்தில், இருமுறை நிறவெறி சம்பவம் நிகழ்ந்தது. எல்லைப் பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் இதில் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, பிசிசிஐ தரப்பில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் முறைப்படி புகாரளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதாவது, “நடைபெற்ற சம்பவம் மிகவும் தீவிரமானது. அதை நாங்கள் லேசாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் எங்களின் நண்பர்கள். அவர்களிடம், இந்த சம்பவத்திற்காக முழுமையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் சிட்னி மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படும். காவல்துறையினருடன் இண‍ைந்து எங்களின் விசாரணையை துவக்கியுள்ளோம். இந்த மோசமான நிகழ்வுக்காக, இந்திய அணியிடம் மீண்டுமொருமுறை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

 

More articles

Latest article