சிட்னி:
ங்கிலாந்தில் தயாராகும் மருந்து வெற்றியடைந்தால், குடிமகன்கள் அனைவருக்கும் சொந்த நாட்டில் அதே மருந்து தயார் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து என ரஷ்யா மட்டும் கண்டறிந்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையே, ஸ்வீடிஷ்-பிரிடீஷ் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆஸ்திரேலிய அரசு ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஸ்வீடிஷ்-பிரிடீஷ் மருந்து தயாரிக்கும் நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மருந்து தொடர்பான ஆய்வுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

ஒப்பந்தத்தின்படி, கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால், அது ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்காட் மோரிசன் மேலும் கூறுகையில், “ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றியடைந்தால், நம் நாட்டிலே அந்த மருந்து தயாரிக்கப்படும். அரசின் கட்டுப்பாட்டில் மக்கள் அனைவருக்கும் இந்த மருந்து அளிக்கப்படும். ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டரை கோடி மக்களுக்கும் கட்டண வசூல் இல்லாமல் இந்த சேவை நடக்கும்” என்றார்.

கொரோனா வைரசைக் கண்டு மக்கள் அச்சப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் இந்த செய்தி ஆஸ்திரேலிய மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.