அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
தற்போது 12 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களை மட்டுமே சிறையில் அடைக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றி, சிறுவர்களை சிறையில் அடைக்கும் வயதை 10ஆக குறைக்க ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்திய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இந்த புதிய விதிமுறை எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேளையில் சிறுவர்களை மிகக்குறைந்த வயதிலேயே சிறையில் அடைப்பது இளம்வயதிலேயே குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
வடக்கு பிராந்திய நிர்வாகத்தின் இந்த முடிவு குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களை திருத்துவதை நோக்கமாக கொண்டே அவர்களை சிறையில் வைக்கும் நிலை மாறி குற்றங்களை மேலும் அதிகரிக்கவே வழிசெய்யும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.