வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோபைடன், துணைஅதிபராக தேர்வாகி உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலாஹாரிஸ் ஆகியோர் வரும் 20ந்தேதி பதவி ஏற்க உள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்கள் வரையப்பட்டுள்ளது. கமலாஹாரிஸ் சொந்த ஊரைச்சேர்ந்தவர்கள், இந்தியர்கள், தங்களது வீடுகளில் தமிழகத்தின் பாரம்பரிய கோலங்களை வரைந்து வரவேற்பு செய்து வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் மற்றும், துணைஅதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மெய்நிகர் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை வரவேற்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவழியினர், தமிழர்கள் என பலரும், அவர்களது வீடு முன்பு வண்ண வண்ணக் கோலங்களை தரையில் வரைந்து வரவேற்றுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் முன், டைல்ஸ்களை பயன்படுத்தி கோலங்களை உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள், இந்த கோலங்களை உருவாக்கியதாகவும், பாதுகாப்பு காரணமாக அந்த கோலங்கள் அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் காணொலி காட்சி மூலமாக இந்த கோலங்கள் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலா ஹாரிசின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களும், அவரது உறவினர்களின் வீட்டைச் சேர்ந்த பெண்கள் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் காண்பிக்கும் வகையிலான வண்ணக் கோலங்களை வரைந்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.