புதுக்கோட்டை,
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடுக்கடலில் மீன்பிடிப்பவர்களையும், எல்லை பகுதிகளில் மீன்பிடிப்பவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.
தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 7 பேரை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.மு
ன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது குறிப்படத்தக்கது.
இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு, தமிழக மீனவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வகையில் அதிக பட்சமாக 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய மசோதாவை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.