இந்திய ரயில்வே தனது 172வது நிறைவு விழாவை இன்று கொண்டாடியது, 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் போரி பந்தரிலிருந்து தானே வரையில் ரயில் இயக்கப்பட்டது.

இதையடுத்து ரயில்வே தனது 172வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சோதனை அடிப்படையில் ரயிலுக்குள் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.

மும்பை-மன்மத் ‘பஞ்சவதி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் சோதனை அடிப்படையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மத்திய ரயில்வேயின் மும்பை தலைமையகம், பூசாவல் பிரிவு மற்றும் மகாராஷ்டிரா வங்கியுடன் இணைந்து இந்த ஏடிஎம்-ஐ அமைத்துள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயிலில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். “ரயிலில் முதல் முறையாக ஏடிஎம் வசதி” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த சோதனை வெற்றியடைந்தால், ATM இயந்திரம் அதிக ரயில்களில் நிறுவப்படும்.” 172 ஆண்டுகளுக்கு முன்பு 1853 ஆம் ஆண்டு தொடங்கிய 34 கி.மீ. ரயில் பாதை, இன்று உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்பாக வளர்ந்துள்ளது. “இந்திய ரயில்வே இந்தப் பெருமையுடன் முன்னேறும்” என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.