டெல்லி
அமைச்சர் அதிஷி இன்னும் 2 நாட்களுக்குள் டெல்லியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் ஏற்காவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குடிநீர் பிரச்னையும் அதிகரித்துள்ளது. இன்ற் டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதிஷி இது குறித்து செய்தியாளர்களிடம்,
”டெல்லியின் குடிநீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் இதற்கு உரிய தீர்வு காண வேண்டியுள்ளேன். அடுத்த இரண்டு நாட்களுக்குள் இதற்கு தீர்வு இல்லை என்றால் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். நேற்று ஹரியாணா மாநிலம் 513 எம்ஜிடி நீரை திறந்து விட்டார்கள். ஆனால், அவர்கள் டெல்லிக்கு தர வேண்டிய பங்கு 613 எம்ஜிடி”
என தெரிவித்துள்ளார்
ஏற்கனவே ஆம் ஆத்மி அரசு குடிநீர் பிரச்னைக்காக உச்சநீதிமன்றத்தை நாடியபோது பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கூடுதல் நீரை திறக்க வேண்டும் என அரசு கோரிக்கை வைத்தது.
எனவேஇமாச்சல் பிரதேசம் கூடுதல் நீரை திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இமாச்சலப் பிரதேச அரசு நீர் இல்லை என தெரிவித்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு எதிராக டெல்லி பாஜக போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.